ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் விபத்து: ரெயிலில் அடிபட்டு வக்கீல் உள்பட 3 பேர் பலி


ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் விபத்து: ரெயிலில் அடிபட்டு வக்கீல் உள்பட 3 பேர் பலி
x

ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் ரெயிலில் அடிபட்டு வக்கீல் உள்பட 3 பேர் பலியானார்கள்.

சென்னை

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா கருங்காலக்குடி பொன்னாரம் பட்டியைச் சேர்ந்தவர் தன்ராஜ்(வயது 45). வக்கீலான இவர், தாம்பரம் பகுதியில் தனது நண்பரை பார்த்து விட்டு தாம்பரம் சானடோரியம் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார். அப்போது மின்சார ரெயிலில் அடிபட்டு பரிதாபமாக இறந்தார்.

அதேபோல் குரோம்பேட்டை புருஷோத்தம் நகரை சேர்ந்தவர் புவனேஸ்வரன் (42). தச்சுத்தொழிலாளியான இவர், உடல்நிலை சரி இல்லாததால் ஆஸ்பத்திரிக்கு செல்ல குரோம்பேட்டை ெரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றபோது மின்சார ரெயில் மோதி பலியானார்.

இதேபோல ஊரப்பாக்கம் ரெயில் நிலையம் அருகே 30 வயது மதிக்கத்தக்க வாலிபர், எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு பலியானார். அவர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை.

ஒரே நாளில் 3 வெவ்வேறு இடங்களில் அடுத்தடுத்து நடந்த விபத்துகளில் வக்கீல் உள்பட 3 பேர் பலியான சம்பவம் குறித்து தாம்பரம் ெரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வைரவன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

1 More update

Next Story