சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்... மீறினால் வழக்கு : போலீசார் எச்சரிக்கை


சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்... மீறினால் வழக்கு : போலீசார் எச்சரிக்கை
x
தினத்தந்தி 8 Nov 2023 3:10 PM IST (Updated: 8 Nov 2023 3:11 PM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகை வரும் 12-ம்தேதி கொண்டாடப்பட உள்ளது.

சென்னை,

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 12-ம்தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் , சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கூடுதல் கமிஷனர்கள் பிரேமானந்த் சின்கா (தெற்கு), அஸ்ரா கார்க் (வடக்கு), சுதாகர் (போக்குவரத்து) ஆகியோர் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.

பின்னர் கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்கா கூறியதாவது,

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை மாநகரில் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

காலை 6 மணியில் இருந்து 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை என 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி உள்ளது. அதே போன்று பலத்த ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க கூடாது என்றும், அதிக மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எனவே பொதுமக்கள் இந்த விதிமுறைகளை பின்பற்றி பட்டாசுகளை வெடித்து பாதுகாப்பான முறையில் தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டும். அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசுகள் வெடிப்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story