கலைஞரின் சாதனைகளை இளைய தலைமுறையிடம் எடுத்துச் செல்ல வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


கலைஞரின் சாதனைகளை இளைய தலைமுறையிடம் எடுத்துச் செல்ல வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

கோப்புப்படம் 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

சென்னை,

சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நூற்றாண்டு விழா பொறுப்பாளர்கள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களுடன் முதல்-அமைச்சர் ஆலோசனை செய்தார்.

மேலும், கலைஞர் நூற்றாண்டை கொண்டாட ஆறு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுடன் ஆலோசித்தார். செப்டம்பர் 17-க்கு பிறகு திமுகவின் பவள விழாவையும் சேர்த்தே கொண்டாடுங்கள் என நிர்வாகிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், "கலைஞரின் சாதனைகளை இளைய தலைமுறையிடம் நாம் எடுத்துச் செல்ல வேண்டும். கலைஞரின் வரலாற்றை திரித்து எழுதும் கூட்டத்திடம் இருந்து உண்மை வரலாற்றை நாம் காப்பாற்ற வேண்டும். கலைஞர் கருணாநிதியின் உழைப்பை, போராட்டத்தை, சாதனைகளை சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்" என்று கூறினார்.


Next Story