அனுமதியின்றி போராட்டம் நடத்தினால் நடவடிக்கை


அனுமதியின்றி போராட்டம் நடத்தினால் நடவடிக்கை
x

பள்ளி மாணவி இறப்பு தொடர்பாக அனுமதியின்றி போராட்டம் நடத்தினால் நடவடிக்கை விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை

விழுப்புரம்

விழுப்புரம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் பள்ளி மாணவி இறப்பு சம்பந்தமாக பொய்யான தகவல்களை சமூகவலைத் தளங்களில் பரப்புபவர்களின் சமூகவலைத்தள கணக்குகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. எனவே பொய்யான தகவல்களை யாரும் பரப்பாதீர்கள். மீறி பொய்யான தகவல்களை சமூகவலைத்தளங்களில் பரப்புபவர்களின் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதை விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் யாரேனும் காவல்துறை அனுமதியின்றி சட்டம்- ஒழுங்கை பாதிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் அல்லது போராட்டம் நடத்துவதாக கூறினால் அவர்களை நம்பி போராட்டத்தில் கலந்து கொள்ளாதீர்கள். அவ்வாறு கலந்துகொள்பவர்கள் மீது காவல்துறை மூலம் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த தகவலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story