அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு..!!


அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு..!!
x

கோப்புப்படம்

வருவாயை அதிகரித்து, நிதிச்சுமையை குறைக்க போக்குவரத்து ஊழியர்களுக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.

சென்னை,

வருவாயை அதிகரித்து, நிதிச்சுமையை குறைக்க போக்குவரத்து ஊழியர்களுக்கு இலக்கு நிர்ணயம் செய்து போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பேருந்துகளில் முழுமையான அளவு பயணிகளை ஏற்றி சென்று கட்டணங்களை வசூல் செய்து வருவாய் அதிகரிக்கவும் போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு இலக்கு நிர்ணயித்து சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், "14வது ஊதிய பேச்சுவார்த்தையின் படியும், அகவிலைப்படி உயர்வு காரணமாகவும், மாதத்திற்கு ரூ.10 கோடி தேவை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. மாதத்திற்கு ரூ.3.40 கோடி பேருந்துகளில் விளம்பரங்கள் மூலமாக வருகிறது. மீதமுள்ள ரூ.6.60 கோடி பயணிகளுக்கு வழங்கப்படும் டிக்கெட் மூலமாகவே வசூலிக்க வேண்டும். பேருந்துகளில் முழுமையான அளவு பயணிகளை ஏற்றிச் சென்று கட்டணங்களை வசூல் செய்து வருவாயை அதிகரிக்க வேண்டும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வருவாயை அதிகரிக்கவும் நிதிச்சுமையை குறைக்கவும் போக்குவரத்து ஊழியர்களுக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றும் இதனை அனைத்து மண்டல மேலாளர்களும் பின்பற்ற வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story