அனுமதியின்றி கட்டடங்களை கட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - மாநகராட்சிக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


அனுமதியின்றி கட்டடங்களை கட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க  வேண்டும் - மாநகராட்சிக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

மாநகராட்சியுடன், காவல்துறை இணைந்து செயல்பட்டால் மட்டுமே ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியும்.என மதுரை ஐகோர்ட்டு தெரிவித்தது

மதுரை,

மதுரையில் சட்டவிரோத கட்டுமானங்களை அகற்ற உத்தரவிடக்கோரி மதுரையை சேர்ந்த டைட்டஸ் மதன் குமார் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அனுமதியற்ற கட்டுமானங்கள் மேற்கொள்வோர் மீது கிரிமினல் வழக்குப்பதிந்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மேலும் மதுரையின் பல்வேறு பகுதிகளில் அனுமதியற்ற கட்டுமானங்கள் கட்டப்படுவதை அதிகாரிகள் ஆய்வு செய்வதே இல்லை. சட்டவிரோத கட்டுமான விவகாரத்தில் மாநகராட்சியுடன், காவல்துறை இணைந்து செயல்பட்டால் மட்டுமே ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியும்.. மதுரை மாநகராட்சி அதிகாரிகள் அந்தந்த பகுதிகளில் தினந்தோறும் ஆய்வு செய்து அனுமதியற்ற கட்டுமானங்களை கண்டறிந்து காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு தெரிவித்தது


Next Story