தட்டுப்பாடு இல்லாமல் ரசாயன உரங்கள் வழங்க நடவடிக்கை


தட்டுப்பாடு இல்லாமல் ரசாயன உரங்கள் வழங்க நடவடிக்கை
x

தட்டுப்பாடு இல்லாமல் ரசாயன உரங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

விருதுநகர்

மாவட்டத்தில் பயிர் சாகுபடி நடைபெற்று வரும் நிலையில் விவசாயிகளுக்கு தேவையான யூரியா உள்ளிட்ட ரசாயன உரங்கள் தேவையான அளவிற்கு கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட நிர்வாகம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தின் போது தெரிவித்தது. ஆனால் தற்போது கூட்டுறவு சங்கங்களில் யூரியா போதிய அளவு இருப்பு இல்லாத நிலை இருப்பதாக விவசாயிகள் தரப்பில் புகார் கூறப்படுகிறது. இதுகுறித்து செவலூர் விவசாயி சங்கரவேல் கூறுகையில், தங்கள் பகுதியில் கூட்டுறவு சங்கங்களில் யூரியா கிடைக்காத நிலையில் தனியார் விற்பனை நிலையங்களில் யூரியா வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தனியார் விற்பனை நிலையங்களில் யூரியா உரம் வாங்க வேறு சில உரங்களையும் சேர்த்து வாங்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் பயிர் சாகுபடிக்கு தேவையான ரசாயன உரங்களை கூட்டுறவு சங்கங்கள் மூலம் தட்டுப்பாடு இல்லாமல் வினியோகிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது என்றார்.


Next Story