நடிகர் விஜய் ரசிகர்கள் உற்சாக நடனமாடி கொண்டாட்டம்


நடிகர் விஜய் ரசிகர்கள் உற்சாக நடனமாடி கொண்டாட்டம்
x
தினத்தந்தி 19 Oct 2023 6:45 PM GMT (Updated: 19 Oct 2023 6:46 PM GMT)

தூத்துக்குடியில் லியோ திரைப்படம் வெளியான தியேட்டர் முன்பு நடிகர் விஜய் ரசிகர்கள் உற்சாக நடனமாடி கொண்டாடினர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் வெளியிடப்பட்டதையொட்டி ரசிகர்கள் உற்சாகமாக நடனமாடி கொண்டாடினர்.

லியோ

தூத்துக்குடியில் நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் 3 தியேட்டர்களில் நேற்று காலை 9 மணிக்கு திரையிடப்பட்டது. இதனை முன்னிட்டு நேற்று அதிகாலை முதல் ரசிகர்கள் தியேட்டர் முன்பு திரண்டனர். பெண் ரசிகைகளும் குவிந்து காணப்பட்டனர்.

ரசிகர்கள் சினிமா தியேட்டர்கள் முன்பு மேளதாளங்கள் இசைத்தபடி உற்சாகமாக நடனம் ஆடி கொண்டாடினர். சிலர் இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.

ரசிகர்கள் கொண்டாட்டம்

ரசிகர்கள் விஜய் மக்கள் இயக்க கொடிகளையும் ஏந்திய படி வந்தனர். பெரும்பாலானவர்கள் நீண்ட வரிசையில் நின்று டிக்கெட்டுகளை உயர்த்திப் பிடித்த படி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் திரைப்படத்தின் ரசிகர்கள் காட்சியின்போது குடும்பத்தோடு சென்று படத்தை பார்த்து ரசித்தார்.


Next Story