பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினர் சேர்ப்பு - மக்கள் நீதி மய்யம் வரவேற்பு


பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினர் சேர்ப்பு - மக்கள் நீதி மய்யம் வரவேற்பு
x

பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரர் உள்ளிட்ட சமூகத்தினரைச் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது வரவேற்கத்தக்கது என்று மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.

சென்னை,

நரிக்குறவர், குருவிக்காரர் மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இனி பழங்குடியினருக்கு வழங்கப்படும் சலுகைகள் அனைத்தும் நரிக்குறவர், குருவிக்காரர் பிரிவினருக்கும் கிடைக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரர் உள்ளிட்ட சமூகத்தினரைச் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது வரவேற்கத்தக்கது என்று மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரர் உள்ளிட்ட சமூகத்தினரைச் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது வரவேற்கத்தக்கது.

அதேசமயம், ஏற்கெனவே எஸ்.டி. பட்டியலில் உள்ள சமூகத்தினர் பாதிக்காத வகையில் இந்த அறிவிப்பை செயல்படுத்த வேண்டும். மேலும், தாமதமின்றி சாதிச் சான்றிதழ் வழங்கப்படுவதையும்; நலத்திட்ட உதவிகள் கோரும் விண்ணப்பங்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுவதையும்; உயர்கல்வி, வேலைவாய்ப்புகளில் பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு முறையாகப் பின்பற்றப்படுவதையும் மத்திய, மாநில அரசுகள் உறுதிசெய்ய வேண்டும்" என்று கூறியுள்ளது.



Next Story