கிளாம்பாக்கத்தில் கூடுதல் பணிகள்: வழிகாட்டுக் குழு அமைப்பு


கிளாம்பாக்கத்தில் கூடுதல் பணிகள்: வழிகாட்டுக் குழு அமைப்பு
x

கோப்புப்படம்

கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பணிகளை விரைவுபடுத்தவும், பயணிகளுக்கு தேவையான கூடுதல் வசதிகளை செய்து தரவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

சென்னை,

கிளாம்பாக்கம் புதிய பஸ் முனையம் சமீபத்தில் திறந்து வைக்கப்பட்டது. அங்கு நடைபெற்று வரும் பணிகளை விரைவுபடுத்தவும், பயணிகளுக்கு தேவையான கூடுதல் வசதிகளை செய்து தரவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, சென்னை கிளாம்பாக்கம், கருணாநிதி நூற்றாண்டு பஸ் முனையத்தில் பஸ்களின் இயக்கம் மற்றும் அம்முனையத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை ஒருங்கிணைக்க, சென்னை பெருநகர் வளர்ச்சி குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா தலைமையில் வழிகாட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து துறைசார்ந்த அதிகாரிகள், போலீஸ் உயர் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.

தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா உத்தரவின்படி அமைக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து முனைய வழிகாட்டுதல் குழு, பேருந்து இயக்கம், செயல்பாடுகளை கண்காணித்து ஆலோசனை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story