ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ஆய்வு


ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ஆய்வு
x

வேப்பந்தட்டையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்திற்கு ஆய்வு பணிக்காக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் கற்பகம் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதனைத்தொடர்ந்து அமைச்சர் கயல்விழி வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் ரூ.1½ கோடியில் கட்டப்பட்டு வரும் ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவியர் விடுதி கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் கட்டுமானத்தின் தரம் குறித்தும், மாணவிகளுக்கான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்திடும் வகையில் போதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் ஆய்வு செய்தார். மேலும் இந்த விடுதியின் கட்டுமான பணிகளை விரைந்து முடித்து, மாணவிகளின் பயன்பாட்டிற்காக ஒப்படைக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்நிகழ்வின் போது, மாவட்ட வருவாய் அதிகாரி வடிவேல்பிரபு, தாட்கோ மேலாளர் சுந்தரம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் விஜயன் உள்பட பலர் உடனிருந்தனர்.

1 More update

Next Story