ஆதிதிராவிடர்-பழங்குடியினர் மாணவர்கள் நர்சிங் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்


ஆதிதிராவிடர்-பழங்குடியினர் மாணவர்கள் நர்சிங் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்
x

ஆதிதிராவிடர்-பழங்குடியினர் மாணவர்கள் நர்சிங் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்.

பெரம்பலூர்

பயிற்சி

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழக (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் இளங்கலை மற்றும் முதுகலை அறிவியல் பட்டப்படிப்பில் நர்சிங் துறையில் பொது மருத்துவம் மற்றும் ஜி.என்.எம். மற்றும் அடிப்படை இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள், தனியார் நிறுவனம் மூலம் நர்சிங் சிறப்புக்கான முடித்தல் திறன் எனப்படும் செவிலியர் பயிற்சியை பெறுவார்கள்.

இந்த பயிற்சியானது 2 முறைகளில் நடைபெறும். முதல் 2 வாரங்களில் இணைய வழியில் கற்றல் முறையிலும், அடுத்த 4 வாரங்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள மாணவ-மாணவிகளுக்கு ஊக்க தொகையும், இப்பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் முன்னணி மருத்துவமனைகளில் வேலை வாய்ப்பும் வழங்கப்படும்.

ஆதிதிராவிடர்-பழங்குடியினர் மாணவர்கள் நர்சிங் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

இப்பயிற்சினை பெற www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இப்பயிற்சிக்கான கட்டணமும் தாட்கோவால் வழங்கப்படும். இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்த பிளஸ்-2 முடித்த மற்றும் பயிலும் மாணவ-மாணவிகள் பயனடையலாம் என்று கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.


Next Story