அ.தி.மு.க., பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கு தள்ளிவைப்பு- ஐகோர்ட்டு உத்தரவு


அ.தி.மு.க., பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கு தள்ளிவைப்பு- ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 11 Oct 2022 6:50 PM IST (Updated: 11 Oct 2022 7:06 PM IST)
t-max-icont-min-icon

பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி கட்சியின் முடிவுகளை எடுக்க தடை விதிக்க வேண்டும் என்று அதிமுக உறுப்பினர் வழக்கு தொடர்ந்தார்.

சென்னை,

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க., உறுப்பினரான எஸ். சூரியமூர்த்தி என்பவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ''அ.தி.மு.க., விதிகளுக்கு முரணாக கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி நடந்த பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எனவே அந்த தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும்.

அந்த பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி கட்சியின் முடிவுகளை எடுக்க தடை விதிக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கக்கூடாது என உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி டி.கிருஷ்ணகுமார் ஆகியோர் கொண்ட முதல் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு தொடர்பாக தீர்ப்புகளை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்து படிக்க வேண்டியுள்ளது. அதனால், விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று மனுதாரர் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, விசாரணையை 2 வாரங்களுக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.


Next Story