பொள்ளாச்சி ஜெயராமன் மருத்துவமனையில் அனுமதி


பொள்ளாச்சி ஜெயராமன் மருத்துவமனையில் அனுமதி
x

அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோவை,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன், கடந்த சில நாட்களாக அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.பின்னர் அவர், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து டாக்டர்கள் கூறுகையில், போதிய அளவு தண்ணீர் குடிக்காததால் ஏற்பட்ட பாதிப்பால் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. ஒரு சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி இருப்பார் என்று தெரிவித்தனர்.

1 More update

Next Story