பவானியில் முன்னாள் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு; அ.தி.மு.க.வினர் திரளானோர் பங்கேற்பு
பவானியில் முன்னாள் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு; அ.தி.மு.க.வினர் திரளானோர் பங்கேற்பு
ஈரோடு
பவானி
அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதல்- அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, பவானி வழியாக அத்தாணிக்கு காரில் சென்றார். இதைத்தொடர்ந்து பவானியில் ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ. தலைமையில் முன்னாள் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பட்டாசு வெடித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பவானி நகர செயலாளர் எம்.சீனிவாசன் மற்றும் கட்சியின் ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் திரளானோர் கலந்து கொண்டு முன்னாள் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சால்வை அணித்து வரவேற்றனர்.
Related Tags :
Next Story