அ.தி.மு.க. பூத் கமிட்டி கூட்டம்
தென்காசி மாவட்டத்தில் வடக்கு அச்சம்பட்டி, தெற்கு அச்சம்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அ.தி.மு.க. பூத் கமிட்டி கூட்டம் நடந்தது.
பனவடலிசத்திரம்:
தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. ஆணைக்கிணங்க வடக்கு அச்சம்பட்டி, தெற்கு அச்சம்பட்டிவடக்கு அச்சம்பட்டி, தெற்கு அச்சம்பட்டி, கருப்பனூத்து, தேவர்குளம், மேலஇலந்தைகுளம் ஆகிய பகுதிகளில் இளைஞர்-இளம்பெண்கள் பாசறை பூத் கமிட்டி ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் வி.எம். ராஜலட்சுமி தலைமை தாங்கினார். மானூர் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் முன்னிலை வைத்தார். இளைஞர் இளம்பெண்கள் பாசறை ஒன்றிய துணை செயலாளர் மற்றும் மானூர் வடக்கு ஒன்றிய பூத் கமிட்டி பொறுப்பாளர் செந்தில்குமார் வரவேற்று பேசினார். இதில் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் மானூர் வடக்கு ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் இளம்பெண்கள் மற்றும் இளைஞர் பாசறை பூத் கமிட்டி அமைப்பது, அனைத்து வாக்காளர்களையும் வாக்குப்பதிவு செய்ய கேட்டுக்கொள்வது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.