அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
திருப்பத்தூரில் ஐகோர்ட்டு தீர்ப்பை வரவேற்று அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூரில் ஐகோர்ட்டு தீர்ப்பை வரவேற்று அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
அ.தி.மு.க. பொதுக்குழுவை எதிர்த்து முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு வழக்கை தள்ளுபடி செய்தது.
இதனையொட்டி திருப்பத்தூர் நகர அ.தி.மு.க. சார்பில் நகர போலீஸ் நிலையம் அருகே பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை நகரச் செயலாளர் டி. டி. குமார், வழங்கி பேசினார், நிகழ்ச்சியில் மாவட்ட பாசறை செயலாளர் டி.டி.சி.சங்கர், அவைத் தலைவர் ரங்கநாதன், தம்பா கிருஷ்ணன், சோடா பாசு, நகராட்சி கவுன்சிலர் எஸ்.எம்.எஸ்.சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story