விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்


விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 July 2023 12:15 AM IST (Updated: 21 July 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தமிழகத்தில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க.அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தமிழகத்தில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க.அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

காய்கறி, அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறியது, அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுவதை தடுக்க தவறிய தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் டாக்டர் மணிகண்டன், மாவட்ட அவைத்தலைவர் சாமிநாதன், நகர் செயலாளர் பால்பாண்டியன், முன்னாள் எம்.பி.நிறைகுளத்தான், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சதன்பிரபாகர், டாக்டர் முத்தையா, மாவட்ட இணை செயலாளர் கவிதா சசிகுமார், மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் மருதுபாண்டியன், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் சுந்தரபாண்டியன், ஆனிமுத்து, எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் ரத்தினம், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் சேது.பாலசிங்கம், மாணவரணி மாவட்ட செயலாளர் செந்தில்குமார், தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட செயலாளர் சரவணகுமார், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ஸ்டாலின் ஜெயச்சந்திரன், துணை செயலாளர் செல்வராஜ், மகளிர் அணி ஜெயிலானி சீனிக்கட்டி, நாகஜோதி, மீனவர்அணி மாவட்ட செயலாளர் எம்.எஸ். அருள், ராமேசுவரம் நகர் செயலாளர் கே.கே. அர்ஜுனன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தள்ளுமுள்ளு

கூட்டத்தில் தி.மு.க அரசை கண்டித்து பேசிக்கொண்டிருந்தபோது கீழே நின்றிருந்த ஒருவர் கத்தி கூச்சலிட்டு விசில் அடித்தார். இதனை மேடையில் இருந்த மாவட்ட செயலாளர் முனியசாமி உள்ளிட்டோர் கண்டித்தனர். ஓ.பி.எஸ். ஆதரவாளர் என கூட்டத்தில் இருந்தவர்கள் கூச்சலிட்டபடி அந்த நபரை தாக்க முயன்றனர். இதனால் அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் அந்த நபரை அழைத்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story