அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம்

பள்ளிபாளையம்
பள்ளிபாளையம் அடுத்த ஆலம்பாளையம் பேரூராட்சியில் தலைவர் சகுந்தலா மற்றும் செயல் அலுவலர் கிருஷ்ணவேணி உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாமக்கல்லில் இருந்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் சகுந்தலா, செயல் அலுவலர் மற்றும் அலுவலக பணியாளர்களிடம் சோதனை மேற்கொண்டனர். மேலும் அவர்களை நாமக்கல் வரவழைத்தும் விசாரணை நடத்தினர்.
இந்தநிலையில் தலைவர் சகுந்தலா மற்றும் செயல் அலுவலர் கிருஷ்ணவேணி, தலைவரின் மகன் கார்த்திக் ஆகியோர் பேரூராட்சியில் செலவு தொகையில் ஊழல் செய்வதாக கூறி அ.தி.மு.க. கவுன்சிலர்கள் நேற்று காலை பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் பேரூராட்சி தலைவர் செல்லதுரை தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் குடிநீர் குழாய் அமைப்பதில் ஊழல் செய்திருப்பதாகவும், தூய்மை பணியாளர்களை குறைந்த அளவில் நியமனம் செய்துவிட்டு, அதிக ஆட்களுக்கு சம்பளத்தை எடுப்பது, மேலும் பல பணிகளில் ஊழல் செய்திருப்பதாக கூறி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் புஷ்பா, சுலோக ஜாபர், கவிதா, பங்கஜம், சேகர், பொதுமக்கள் கலந்துகொண்டு கோஷமிட்டனர்.
இதேபோல் பா.ஜ.க. கட்சியினர் பேரூராட்சியில் தவறு செய்த தலைவர், செயல் அலுவலர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.






