அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு


அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
x

களக்காடு நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு

திருநெல்வேலி

களக்காடு:

களக்காடு நகராட்சி கூட்டம் நேற்று அலுவலக கூட்டரங்கில் நடந்தது. தலைவர் சாந்திசுபாஷ் தலைமை தாங்கினார். துணை தலைவர் பி.சி.ராஜன், சுகாதார ஆய்வாளர் ஆறுமுகநயினார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டம் தொடங்கியதும் கவுன்சிலர் சங்கரநாராயணன் எழுந்து நகராட்சியின் வரவு, செலவு கணக்குகளை மன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதற்கு பதில் அளித்த தலைவர் சாந்தி சுபாஷ் மற்றும் சுகாதார ஆய்வாளர் ஆறுமுகநயினார், நகராட்சி என்பதால் மாதாமாதம் கணக்கு காட்ட சட்டத்தில் இடமில்லை என்றும், ஏப்ரல் மாதம் நடைபெற்ற கூட்டத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டுள்ளது, என்றனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 3 பேர் உள்பட 11 பேர் எழுந்து வரவு, செலவு கணக்கு காட்ட வேண்டும் என்றும், நகராட்சிக்கு அதிகவிலைக்கு பொருட்கள் வாங்கப்பட்டுள்ளது, இதற்கு பதிலளிக்க வேண்டும் என்றும் கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கவுன்சிலர்கள் ஒரே நேரத்தில் பேசிக் கொண்டிருந்ததால் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது. அதனைதொடர்ந்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ஆயிஷா, இசக்கியம்மாள், முருகேசன் ஆகிய 3 பேர் கூட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கோஷமிட்டவாறு வெளிநடப்பு செய்தனர்.


Next Story