திராவிட மாடலை உருவாக்கியதே அ.தி.மு.க. தான் - சிவகாசி கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி
திராவிட மாடலுக்கு சொந்தக்கார கட்சி அ.தி.மு.க.; திராவிட மாடலை உருவாக்கியதே அ.தி.மு.க தான் என சிவகாசி பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசசினார்.
சிவகாசி
அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளர் பதவி ஏற்ற பிறகு முதன் முறையாக விருதுநகர் மாவட்டத்திற்கு பழனிசாமி சென்றார்.
அவருக்கு மதுரை விமான நிலையத்தில், அ.தி.மு.க. தொண்டர்கள் மலர்கள் தூவியும், மேலதாளங்கள் முழங்கவும் வரவேற்பு அளித்தனர்.
மின் கட்டண உயர்வுக்கு திமுக அரசை கண்டித்து சிவகாசியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அதிமுக தமிழகத்தில் 32 காலம் ஆட்சி செய்திருக்கிறது; தமிழகம் இந்தியாவில் முதன்மை மாநிலம் என சொல்வதற்கு அடித்தளமிட்டது அதிமுக.
திராவிட மாடல் திராவிட மாடல் என மூச்சுக்கு 300 தடவை ஸ்டாலின் சொல்கிறார்;
அப்படி என்ன திராவிட மாடல் ஆட்சி செய்கிறீர்கள்? திராவிட மாடலுக்கு சொந்தக்கார கட்சி அதிமுக.திராவிட மாடலை உருவாக்கியதே அதிமுக தான்
அமைச்சர் பொன்முடி ஓசியில் பெண்கள் பேருந்தில் பயணம் செய்கிறார்கள் என நக்கலாக பேசுகிறார். அது உங்கள் பணம் அல்ல. மக்கள் பணம். இதற்கெல்லாம் வரும் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என கூறினார்.