அ.தி.மு.க. சார்பில் கிரிக்கெட் போட்டி தொடக்கம்


அ.தி.மு.க. சார்பில் கிரிக்கெட் போட்டி தொடக்கம்
x

அ.தி.மு.க. சார்பில் 120 அணிகள் பங்கேற்கும் மாபெரும் கிரிக்கெட் போட்டி தொடங்கியது.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் திருக்கழுக்குன்றம் கிழக்கு ஒன்றியம் மற்றும் மாமல்லபுரம் பேரூர் அ.தி.மு.க. சார்பில் மாமல்லபுரம், வெங்கம்பாக்கம், வண்டலூர், திருப்போரூர், திருக்கழுக்குன்றம், கல்பாக்கம், செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 120 அணிகள் பங்கேற்கும் மாபெரும் கிரிக்கெட் போட்டி தொடங்கியது. திருக்கழுக்குன்றம் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளரும், மாமல்லபுரம் பேருராட்சி மன்ற துணைதலைவருமான ராகவன் தலைமையில், தொடங்கிய கிரிக்கெட் போட்டியை, சிறப்பு அழைப்பாளர்களான செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம், மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல் ஆகியோர் கலந்து கொண்டு கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்தனர்.

முதல் கட்டமாக நேற்று மாமல்லபுரம் அணியும் - வண்டலூர் வெங்கம்பாக்கம் அணியும் மோதின. ஒவ்வொரு அணிக்கும் 12 ஒவர்கள் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டு உள்ளன. இப்போட்டிகள் இரண்டு மாதங்கள் வரை நடைபெறுகிறது. இந்த கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ரூ.40 ஆயிரம், 2-ம் பரிசு பெறும் அணிக்கு ரூ.30 ஆயிரம், 3-ம்பரிசு பெறும் அணிக்கு ரூ.20 ஆயிரம் என பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளன. கிரிக்கெட் போட்டி தொடக்க விழாவில் மாவட்ட துணை செயலாளர் பி.ஏ.எஸ்வந்த்ராவ், மாமல்லபுரம் நகர செயலாளர் ஏ.கணேசன், மாமல்லபுரம் பேருராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ், மாவட்ட நிர்வாகி பையனூர் குமார், முட்டுக்காடு முனுசாமி, ஒன்றிய அணி நிர்வாகிகள் கவுன்சிலர் பாம்பினோ சுகுமாரன், ஸ்ரீதர், முன்னாள் கவுன்சிலர் பெ.பூங்குழலி, பி.எஸ்.உமாபதி, டி.ராஜா உள்பட கலந்து கொண்டனர்.


Next Story