அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை படிவம் வினியோகம்


அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை படிவம் வினியோகம்
x
தினத்தந்தி 8 July 2023 6:45 PM GMT (Updated: 9 July 2023 11:54 AM GMT)

பாவூர்சத்திரம் அருகே பெத்தநாடார்பட்டியில் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கப்பட்டது.

தென்காசி

பாவூர்சத்திரம்:

பெத்தநாடார்பட்டியில் தென்காசி தெற்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் அறிவுறுத்தலின் பேரில், அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. கீழப்பாவூர் கிழக்கு ஒன்றியம் பெத்தநாடார்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் இருளப்பன் கலந்துகொண்டு நிர்வாகிகள், உறுப்பினர் சேர்ப்பதற்கான விண்ணப்ப படிவங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் பெத்தநாடார்பட்டி நிர்வாகிகள் சிவகுமார், கோகிலன், பொன்ராஜ், தங்கமோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story