அ.தி.மு.க. மாநாட்டை முன்னிட்டு தொடர் ஜோதி ஓட்டம் - எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்


அ.தி.மு.க. மாநாட்டை முன்னிட்டு தொடர் ஜோதி ஓட்டம் - எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
x

அ.தி.மு.க. மாநாட்டில் தொண்டர்கள் குடும்பம், குடும்பமாக கலந்து கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

சென்னை,

மதுரையில் வரும் 20-ந் தேதி அ.தி.மு.க. வீர வரலாற்றின் எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. இதையொட்டி மதுரை ரிங் ரோடு வலையங்குளம் பகுதியில் சுமார் 65 ஏக்கர் நிலப்பரப்பில் பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

மாநாட்டில் அ.தி.மு.க. தொண்டர்கள் குடும்பம், குடும்பமாக கலந்து கொள்ள வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதற்கேற்ப தொண்டர்கள் பலத்தை நிரூபிக்கும் வகையில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோரை திரட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வான பிறகு நடைபெறும் முதல் மாநில மாநாடு என்பதால் தொண்டர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், மதுரையில் நடைபெற உள்ள அ.தி.மு.க. மாநாட்டை முன்னிட்டு தொடர் ஜோதி ஓட்டத்தை, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். சென்னையில் இருந்து மாநாடு நடைபெற உள்ள மதுரை நோக்கி 6 நாட்கள் ஜோதி ஓட்டம் நடைபெறுகிறது. இந்த ஜோதி ஓட்டத்தில் சுமார் 500 பேர் பங்கேற்கின்றனர்.


Next Story