நீட் தேர்வில் வெற்றி பெற்றவருக்கு அ.தி.மு.க. நிதி உதவி


நீட் தேர்வில் வெற்றி பெற்றவருக்கு அ.தி.மு.க. நிதி உதவி
x
தினத்தந்தி 16 Aug 2023 12:15 AM IST (Updated: 16 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவில் அருகே நீட் தேர்வில் வெற்றி பெற்றவருக்கு அ.தி.மு.க. நிதி உதவி

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே உள்ள நவநீதகிருஷ்ணபுரத்தில் ஏழை குடும்பத்தில் பிறந்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று சாமானியர்களும் வெற்றி பெறலாம் என எடுத்துக்காட்டாய் விளங்கிய முருகராஜ், தமிழக அளவில் மூன்றாவது இடம் பிடித்து கால்நடை மருத்துவ கல்லூரிக்கு தேர்வான அவரது சகோதரி முத்துலட்சுமி மற்றும் அவர்களது பெற்றோர்களையும் பாராட்டி ஊக்கத்தொகை மற்றும் ஸ்டதெஸ்கோப் உள்ளிட்ட உபகரணங்களை முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க. மாநில மகளிர் அணி துணைச் செயலாளருமான ராஜலெட்சுமி வழங்கினார்.

நிகழ்ச்சியில் குருவிகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் சுப்பையா பாண்டியன், சங்கரன்கோவில் ஒன்றிய செயலாளர் ரமேஷ், மானூர் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், சங்கரன்கோவில் நகர செயலாளர் ஆறுமுகம், மாவட்ட விவசாய அணி செயலாளர் பரமகுருநாதன், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் சவுந்தர், நவநீதகிருஷ்ணாபுரம் கிளை செயலாளர் அய்யாசாமி, நிர்வாகிகள் பாபு கதிரேசன் சிவஞானராஜா முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Related Tags :
Next Story