அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் நினைவு நாள் அனுசரிப்பு


அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் நினைவு நாள் அனுசரிப்பு
x
தினத்தந்தி 4 Sept 2023 12:15 AM IST (Updated: 4 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

குத்தாலத்தில் அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் நினைவு நாள் அனுசரிப்பு

மயிலாடுதுறை


மயிலாடுதுறை தலைஞாயிறு என்.பி.கே.ஆர்.ஆர். கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்னாள் தலைவரும், குத்தாலம் ஒன்றியக்குழு முன்னாள் தலைவரும், முன்னாள் அ.தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளருமான அரையபுரம் தமிழரசன் 3-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு ஜெயப்பிரகாசம் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் அரையபுரம் தமிழரசன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து குத்தாலம் பேரூராட்சி பகுதியில் பணியாற்றி வரும் துப்புரவு பணியாளர்கள் 100 பேருக்கு வேஷ்டி-சேலை வழங்கப்பட்டன. இதனையடுத்து அனைவருக்கும் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story