புழல் சிறையில் இருந்து அ.தி.மு.க. தொண்டர்கள் 14 பேர் விடுதலை


புழல் சிறையில் இருந்து அ.தி.மு.க. தொண்டர்கள் 14 பேர் விடுதலை
x

புழல் சிறையில் இருந்து அ.தி.மு.க. தொண்டர்கள் 14 பேர் விடுதலை ஆனார்கள்.

சென்னை

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கடந்த 11-ந்தேதி எடப்பாடி பழனிசாமி அணியினருக்கும், ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பைச் சேர்ந்த 14 பேரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் அவர்களுக்கு நேற்று முன்தினம் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டது. இதையடுத்து நேற்று காலை 14 பேரும் புழல் சிறையில் இருந்து விடுதலை ஆனார்கள். அவர்களை முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், மாதவரம் மூர்த்தி மற்றும் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து வரவேற்று அழைத்துச்சென்றனர்.


Next Story