மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு


மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
x

மின் கட்டண உயர்வை கண்டித்து மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் தலைவர் ஜெயலட்சுமி தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து பாண்டியன் தலைமையில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். அப்போது அவர்கள் தி.மு.க. அரசை கண்டித்து கோஷமிட்டபடி வெளியே வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பதிலுக்கு தி.மு.க. கவுன்சிலர்கள் எழுந்து நின்று சத்தமிட்டதால் கூச்சல் ஏற்பட்டது.

1 More update

Next Story