கோவில்பட்டியில் அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்


கோவில்பட்டியில் அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 25 Oct 2023 12:15 AM IST (Updated: 25 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.

தூத்துக்குடி

கோவில்பட்டி (கிழக்கு):

தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். அகில இந்திய எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளரும், தூத்துக்குடி வடக்கு மாவட்டப் பொறுப்பாளருமான காஞ்சி பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. மோகன், அவைத் தலைவர் என்.கே.பெருமாள், பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், ஜெயலலிதா பேரவை வடக்கு மாவட்டப் பொருளாளர் வேலுமணி, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை வடக்கு மாவட்டச் செயலர் கவியரசன், மத்திய ஒன்றியச் செயலர் பழனிச்சாமி, ஒன்றியச் செயலாளர்கள் அன்புராஜ், வண்டானம் கருப்பசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story