பயிர்களை நாசம் செய்யும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்தக்கோரி சத்தியமங்கலத்தில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்


பயிர்களை நாசம் செய்யும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்தக்கோரி சத்தியமங்கலத்தில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
x

பயிர்களை நாசம் செய்யும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்தக்கோரி சத்தியமங்கலத்தில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈரோடு

சத்தியமங்கலம்

பயிர்களை நாசம் செய்யும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்தக்கோரி சத்தியமங்கலத்தில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம்

சத்தியமங்கலத்தில் உள்ள மலைப்பகுதிகளிலும், வனப்பகுதியையொட்டிய கிராமங்களிலும் உள்ள விளைநிலங்களுக்குள் காட்டுப்பன்றிகள் புகுந்து பயிர்களை நாசம் செய்கின்றன. அதனால் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்தவேண்டும் என்று விவசாயிகள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில் பயிர்களை நாசம் செய்யும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்தக்கோரி சத்தியமங்கலத்தில் விவசாயிகளுடன் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

விவசாயிகளுக்கு பாதிப்பு

அதன்படி சத்தியமங்கலம் பஸ்நிலையம் அருகே நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பவானிசாகர் தொகுதி எம்.எல்.ஏ. பண்ணாரி முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்குள் வராமல் இருக்க வனத்துறையினர் அகழி அமைக்க வேண்டும்.

ஈரோடு மாவட்டத்தில் கோபி, அந்தியூர், பவானிசாகர், ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் மலைப்பகுதி விவசாயிகளின் பயிர்களை காட்டுப்பன்றிகள் நாசப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

புதிய சட்டம்

எனவே கேரளாவில் உள்ளது போல் நமது மாநிலத்திலும் காட்டுப்பன்றியை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்கவேண்டும். அங்குள்ளதுபோல் தமிழகத்திலும் புதிய சட்டம் இயற்றவேண்டும். காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல அனுமதி அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ஈஸ்வரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் எஸ்.ஆர்.செல்வம், சத்தியமங்கலம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர்கள் என்.என்.சிவராஜ், மாரப்பன், பழனிச்சாமி, அரியப்பம்பாளையம் பேரூர் அ.தி.மு.க. செயலாளர் தேவமுத்து, ஊராட்சி தலைவர்கள் கொமாரபாளையம் எஸ்.எம்.சரவணன், சிக்கரசம்பாளையம் ஆர்.சுப்பிரமணியன் உள்பட சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர். முடிவில் சத்தியமங்கலம் நகர அ.தி.மு.க. செயலாளர் ஓ.எம்.சுப்பிரமணியம் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story