திருவண்ணாமலையில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்


திருவண்ணாமலையில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
x

திருவண்ணாமலை நகர அ.தி.மு.க. சார்பில் சொத்துவரி, மின்கட்டணம், பால்விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை நகர அ.தி.மு.க. சார்பில் சொத்துவரி, மின்கட்டணம், பால்விலை உயர்ைவ கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை நகர அ.தி.மு.க. சார்பில் சொத்துவரி, மின்கட்டணம், பால்விலை உயர்வு, தீபத்திருவிழா நுழைவுச்சீட்டு முறைகேடு ஆகியவற்றை கண்டித்து திருவண்ணாமலை நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் ஜெ.செல்வம் முன்னிலை வகித்தார். திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

ஆட்சி அதிகாரத்தில் இல்லையென்றாலும் மக்களின் கோரிக்கைகளுக்காக போராடுகின்ற கட்சியாக இன்றைக்கு அ.தி.மு.க. செயல்பட்டு வருகின்றது. நிறைவேற்ற முடியாத பொய்யான வாக்குறுதிகளை தந்து ஆட்சிக்கு வந்த முதல்-அமைச்சர் தேர்தலின் போது சொன்ன வாக்குறுதிகளை உங்களால் நிறைவேற்ற முடிந்ததா.

இன்றைக்கு தமிழகத்தில் சொத்துவரி 150 மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது. திருவண்ணாமலை நகராட்சியில் ரூ.10 ஆயிரம் வரி செலுத்தி இருந்தால், தற்போது ரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

பள்ளி, கல்லூரிகளில்...

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. பள்ளி, கல்லூரிகளில் போதை பொருட்கள் விற்பனை செய்கின்ற நிலை ஏற்பட்டு உள்ளது. திருவண்ணாமலை நகராட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 6 அ.தி.மு.க. உறுப்பினர்களின் வார்டுகளுக்கு எந்தவித பணிகளும் நடைபெறாமல் உள்ளது. இந்த சூழ்நிலை மாற வேண்டும்.

ஆர்ப்பாட்டத்திற்காக வைக்கப்பட்டு இருந்த பேனர்களை 2 போலீசார் கிழித்து உள்ளனர். அவர்கள் மீது போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். சுமார் 40 லட்சம் பக்தர்கள் கலந்துகொண்ட தீபத்திருவிழாவின் போது பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட அனுமதி அட்டை ரூ.2 ஆயிரத்திற்கும், ரூ.5 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டது. தவறு செய்தவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயசுதா உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story