அ.தி.மு.க. தலைவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்


அ.தி.மு.க. தலைவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்
x
தினத்தந்தி 19 March 2023 7:00 PM GMT (Updated: 2023-03-20T00:30:34+05:30)

மீண்டும் தமிழகத்தில் ஆட்சி அமைக்க அ.தி.மு.க. தலைவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு கூறினார்.

திண்டுக்கல்

சாணார்பட்டி அருகேயுள்ள வேம்பார்பட்டி, மருநூத்தில் அனைத்து கவுண்டர்கள் பேரவை மற்றும் கொங்கு இளைஞர் பேரவை கிளை தொடக்க விழா நடந்தது. இதில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ. வுமான தனியரசு கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்து புதிய கிளையை திறந்து வைத்தார். பின்னர் அவர் புதிய உறுப்பினர்களுக்கு கட்சி உறுப்பினர் அட்டைகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். இதில் கட்சி நிர்வாகிகள் கிருஷ்ணன், பழனிசாமி, பொன்னுசாமி, பாப்பு, முருகேசன், ராஜீ, கோபிநாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் முடிவில் பேரவை தலைவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், அ.தி.மு.க.வில் உள்ள தலைவர்கள் ஒற்றுமையாக செயல்பட்டால் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று 2026-ல் மீண்டும் ஆட்சி அமைக்கலாம். பா.ஜ.க., அ.தி.மு.க. உடன் கூட்டணி அமைத்தால் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று அண்ணாமலை உணர்ச்சி வேகத்தில் கூறியது அவசர கருத்து. அதனை அவர் திரும்ப பெற வேண்டும் என்றார்.


Related Tags :
Next Story