அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
செங்கோட்டையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
செங்கோட்டை:
செங்கோட்டையில் தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மகளிரணி துணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.எம்.ராஜலட்சுமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா எம்.எல்.ஏ. பேசுகையில், அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி கிளை என அனைத்து பகுதிகளிலும் கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்க வேண்டும், வருகிற 18-ந் தேதி சங்கரன்கோவிலுக்கு வருகை தரும் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மாவட்டத்தின் 3 தொகுதிகளில் இருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் கழக தொண்டர்கள், இளைஞர்கள், மகளிரணியினர் சென்று வரவேற்க வேண்டும், பூத் கமிட்டி, மகளிர் குழு, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை குழு அமைத்து பணிகளை துரிதப்படுத்தி முடிக்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் பொய்கை மாரியப்பன், இணை செயலாளர் சண்முகப்ரியா, பொருளாளர் சண்முகையா, மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் முனைவர் சிவஆனந்த், நகர செயலாளர்கள் கணேசன், எம்.கே.முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.