கோம்பையில் அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம்


கோம்பையில் அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம்
x

உத்தமபாளையம் அருகே கோம்பையில் அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தேனி

உத்தமபாளையம் அருகே கோம்பையில் அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இதற்கு கோம்பை பேரூர் செயலாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக கட்சியின் அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜக்கையன் கலந்துகொண்டு பேசியதாவது:-

தமிழகத்தில் சொத்து வரி, குடிநீர் கட்டணம், மின் கட்டணம் மற்றும் விலைவாசி உயர்ந்துவிட்டது. இதனால் பொதுமக்கள் பொருளாதார நெருக்கடிக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் ஒரே சக்தி அ.தி.மு.க. மட்டுமே. அ.தி.மு.க.வில் குழப்பம் நிலவுவதாக சிலர் கூறுகின்றனர். ஆனால் கட்சிக்குள் எந்தவொரு குழப்பமும் இல்லை.

அ.தி.மு.க. ஆரம்பித்த காலம் முதலாகவே தலைமையோடு கருத்து வேறுபாடு ஏற்படுகிறவர்கள், கட்சியை விட்டு பிரிந்து சென்றதுண்டு. பல்வேறு முக்கிய நிர்வாகிகள் கட்சியை விட்டு பிரிந்து சென்றபோதும் அ.தி.மு.க.வுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. எடப்பாடி பழனிசாமி கட்சியின் அசைக்க முடியாத பொதுச்செயலாளராக பதவி ஏற்பார். அதன்பின் இந்த அ.தி.மு.க. இன்னும் எழுச்சியுடன் செயல்படும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார்.


Related Tags :
Next Story