அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம்
தென்காசி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பாவூர்சத்திரத்தில் நடந்தது.
தென்காசி
பாவூர்சத்திரம்:
தென்காசி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பாவூர்சத்திரத்தில்உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமை தாங்கி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்துவதற்கான சிறப்பு முகாம்களில் பணியாற்ற கட்சி நிர்வாகிகளிடம் வாக்காளர் பட்டியலை வழங்கியதுடன், வாக்குச்சாவடி முகவர்கள் நியமிப்பது குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் சண்முகசுந்தரம், மாவட்ட நிர்வாகிகள் காத்தவராயன், முகிலன், ஒன்றிய செயலாளர்கள் அமல்ராஜ், இருளப்பன், அருவேல்ராஜ், முருகேசன், பாலகிருஷ்ணன், ஜெயகுமார், பேரூர் செயலாளர்கள் ஜெயராமன், கார்த்திக்குமார், முத்துராஜ், சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story