அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கும் நிகழ்ச்சி


அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 25 Jun 2023 12:15 AM IST (Updated: 25 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

உடன்குடியில் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

தூத்துக்குடி

உடன்குடி:

தூத்துக்குடி தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட உடன்குடி ஒன்றியத்தில் அ.தி.மு.க. 3-ம் கட்ட புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான படிவங்கள் வழங்கும் நிகழ்ச்சி உடன்குடி சந்தையடித்தெருவில் நடந்தது. தூத்துக்குடி மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். உடன்குடி ஒன்றிய அ.தி.மு.க. பொருளாளர் சங்கரலிங்கம், மாதவன்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் சேர்மத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான சண்முகநாதன் உறுப்பினர் படிவங்களை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் உடன்குடி ஒன்றிய இளைஞரணி செயலாளர் செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story