அ.தி.மு.க. சார்பில் மாட்டு வண்டி பந்தயம்


அ.தி.மு.க. சார்பில் மாட்டு வண்டி பந்தயம்
x
தினத்தந்தி 19 Jun 2023 6:31 PM GMT (Updated: 20 Jun 2023 7:05 AM GMT)

சிவகங்கை அருகே அ.தி.மு.க. சார்பில் மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.

சிவகங்கை


சிவகங்கையை அடுத்த மதகுபட்டி அருகே வீழனேரி கிராமத்தில் அ.தி.மு.க. சார்பில் மாட்டு வண்டி பந்தயம் வீழனேரி-ராமலிங்கபுரம் சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 98 வண்டிகள் கலந்துகொண்டு பெரிய மாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி பந்தயம் என இருபிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 48 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை சக்கந்தி பாண்டி வண்டியும், 2-வது பரிசை எஸ்.எஸ்.கோட்டை சுப்பு வண்டியும், 3-வது பரிசை பாலுத்து கிராமத்தைச் சேர்ந்த சின்னச்சாமி வண்டியும், 4-வது பரிசை திருவாதவூர் பாண்டித்துரை மற்றும் 5-வது பரிசை ஆறாவயல் மெய்யப்பன் வண்டியும் பெற்றது. பின்னர் நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் 50 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை வேப்பங்குளம் தலையாரி சோனைமுத்து வண்டியும், 2-வது பரிசை வீழனேரி எஸ்.பி.எஸ் சரவணன் வண்டியும், 3-வது பரிசை கத்தப்பட்டு தலையாரி வண்டியும், 4-வது பரிசை கிடாரிப்பட்டி பாண்டியராஜன் வண்டியும், 5-வது பரிசை வீழனேரி செந்தில்குமார் வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.


Next Story