பனமரத்துப்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
பனமரத்துப்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பனமரத்துப்பட்டி:
சொத்து வரி, மின் கட்டணம் மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்தும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக கூறி தி.மு.க.அரசை கண்டித்தும் பனமரத்துப்பட்டி ஒன்றிய, பேரூர் அ.தி.மு.க. சார்பில் பேரூராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. வீரபாண்டி எம்.எல்.ஏ. ராஜா என்கிற ராஜமுத்து தலைமை தாங்கினார். கிழக்கு ஒன்றிய செயலாளர் பாலசந்திரன் வரவேற்று பேசினார். நகர செயலாளர் சின்னத்தம்பி முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் புறநகர் மாவட்ட செயலாளரும், மாநில மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான இளங்கோவன் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் வீரபாண்டி முன்னாள் எம்.எல்.ஏ. மனோன்மணி, புறநகர் மாவட்ட மாணவரணி செயலாளர் தமிழ்மணி, மேற்கு ஒன்றிய செயலாளர் வருதராஜ், கிழக்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், மல்லூர் நகர செயலாளர் கண்மணி, பனமரத்துப்பட்டி பேரூராட்சி முன்னாள் தலைவர் பெரியசாமி, பேரூராட்சி கவுன்சிலர்கள் தேவகி, ஜெயலட்சுமி, செல்வமணி, பேரூர் அவை தலைவர் சஞ்சீவி, கூட்டுறவு சங்க தலைவர் மாரியப்பன், ஒன்றிய நிர்வாகி சித்துராஜ், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர்கள் வெங்கடேஷ், பழனிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஒன்றிய குழு தலைவர் ஜெகநாதன் நன்றி கூறினார்.