மின்கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்


மின்கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x

மின்கட்டண உயர்வை கண்டித்து குமரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நாகர்கோவிலில் நேற்று தளவாய் சுந்தரம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

மின்கட்டண உயர்வை கண்டித்து குமரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நாகர்கோவிலில் நேற்று தளவாய் சுந்தரம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டண உயர்வை கண்டித்தும், அதை திரும்பப் பெற வலியுறுத்தியும், அனுமதியின்றி டாஸ்மாக் மதுபான பார் நடத்துவதை கண்டித்தும் குமரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநில அமைப்புச் செயலாளர் கே.டி.பச்சைமால், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் கிருஷ்ணதாஸ், மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் சிவசெல்வராஜன், வக்கீல் பிரிவு மாநில இணைச்செயலாளர் பரமேஸ்வரன், நாகர்கோவில் மாநகர பகுதி செயலாளர்கள் ஜெயகோபால், ஜெவின் விசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

புகார்

தி.மு.க. அரசின் மின் கட்டண உயர்வால் ஏழை-எளிய மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏழை மக்கள் நலன் கருதி 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கினார். ஆனால் ஏழை மக்கள் மீது அக்கறையில்லாமல் மின் கட்டணத்தை அதிகமான அளவு தி.மு.க. அரசு உயர்த்தி உள்ளது. குமரி மாவட்டத்தில் டாஸ்மாக் பார்கள் முறைகேடாக இயங்கி வருகிறது. எனவே சட்டவிரோதமாக செயல்படும் மதுபான பார்களை அகற்ற வேண்டும். இதுகுறித்து கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கோஷம்

ஆர்ப்பாட்டத்தில் அவைத்தலைவர்கள் சேவியர் மனோகரன், சிவகுற்றாலம், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்ட் தாஸ், ஒன்றிய செயலாளர்கள் ஜெசீம், பொன் சுந்தர்நாத், குற்றியார் நிமால், மகராஜபிள்ளை, ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார், அணிசெயலாளர் ஜெயசீலன், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் நீல.பெருமாள், மாநகராட்சி கவுன்சிலர் அக்சயா கண்ணன், குமரி மேற்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வினோஜ், தோவாளை யூனியன் தலைவர் சாந்தினி பகவதியப்பன் மற்றும் நிர்வாகிகள் ஜெயச்சந்திரன் என்ற சந்துரு, ஆ.கோ.ஆறுமுகம், வெங்கடேஷ், சகாயராஜ், வடிவை மாதவன், கோட்டார் கிருஷ்ணன், நாகர்கோவில் மாநகர 26-வது வட்ட செயலாளர் ஸ்ரீமணிகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் தெற்கு பகுதி செயலாளர் முருகேஷ்வரன் நன்றி கூறினார்.

மின்கட்டண உயர்வை சுட்டிக்காட்டும் விதமாக போராட்டத்தில் பங்கேற்ற சிலர் அரிக்கேன் விளக்குகளை கைகளில் பிடித்திருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டண உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.


Next Story