அண்ணா சிலைக்கு அ.தி.மு.க.வினர் மரியாதை
பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி, செங்கோட்டையில் உள்ள அவரது சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தென்காசி
செங்கோட்டை:
தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் செங்கோட்டை போலீஸ் நிலையம் அருகில் பேரறிஞா் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட துணைச்செயலாளா் பொய்கை மாரியப்பன், நகரச்செயலாளா் கணேசன், அவைத்தலைவா் தங்கவேலு உள்பட பலா் கலந்து கொண்டனா்.
Related Tags :
Next Story