அ.தி.மு.க. மாநாட்டு ஜோதிக்கு வரவேற்பு
திண்டிவனம் வந்த அ.தி.மு.க. மாநாட்டு ஜோதிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
திண்டிவனம்
மதுரையில் நடைபெற உள்ள அ.தி.மு.க. மாநாட்டையொட்டி சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்து மதுரை நோக்கி தொடர் ஜோதி ஓட்டம் புறப்பட்டது. இந்த ஜோதி ஒட்ட குழுவினர் பல்வேறு ஊர் வழியாக நேற்று திண்டிவனம் வந்தனர். அப்போது அவர்களை முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்.பி. வழிகாட்டுதலின் பேரில் திண்டிவனம் தொகுதி எம்.எல்.ஏ. அர்ஜுனன் அனைவரையும் வரவேற்று திண்டிவனம்-சென்னை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்தார். இதில் திண்டிவனம் நகர செயலாளர் தீனதயாளன், நகரமன்ற முன்னாள் தலைவர் கே.வி.என்.வெங்கடேசன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் தமிழ்ச்செல்வி செல்லபெருமாள், மரக்காணம் ஒன்றிய செயலாளர்கள் ரவிவர்மன், நடராஜன், பேரூராட்சி தலைவர் கனகராஜ், மேற்கு ஒன்றிய பாசறை செயலாளர் சக்கரவர்த்தி, ஒலக்கூர் ஒன்றிய இளைஞர்அணி செயலாளர் நீலமேகம், கவுன்சிலர் ஜனார்த்தனன், நிர்வாகிகள் வடபழனி, சக்திவேல், இளங்கோ மற்றும் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.