பெரியகுளத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு


பெரியகுளத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு
x

பெரியகுளத்திற்கு வருகை தந்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்

தேனி

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த மாதம் 11-ந் தேதி

நடந்தது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என கூறி ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என நேற்று முன்தினம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் இன்று ஓ.பன்னீர்செல்வம் சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்திற்கு வருகை தந்தார். அவருக்கு அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது கட்சி நிர்வாகிகள் அவருக்கு மாலை அணிவித்து, வீரவாள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் பெரியகுளம் நகர செயலாளர் அப்துல்சமது, அ.தி.மு.க. நகராட்சி குழுத் தலைவர் சண்முகசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பெருமாள் கோவில் முதல் அவரது வீடு வரை வழிநெடுக சாலையின் இரு புறமும் பெண்கள் நின்று மலர் தூவி ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.


Next Story