மதுரை மாநாடு வெற்றிபெற அ.தி.மு.க.வினர் அறுபடை பயணம்
மதுரை மாநாடு வெற்றிபெற நெமிலியில் அ.தி.மு.க.வினர் அறுபடை பயணம் மேற்கொண்டனர்.
அ.தி.மு.க. மதுரை மாநாடு வெற்றிபெற வேண்டி அ.தி.மு.க.வினர் அறுபடை நோக்கி பயணம் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர அ.தி.மு.க. பொருளாளர் நவநீத கிருஷ்ணன் தலைமை தாங்கினார். நெமிலி ஒன்றிய செயலாளர்கள் ஏ.ஜி.விஜயன், அருணாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக அரக்கோணம் சு.ரவி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு அறுபடை பயணத்தை தொடங்கிவைத்தார்.
முன்னதாக எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்பு பஸ் நிலையத்தில் இருந்து வேல் ஏந்தியவாறு பொன்னியம்மன் கோவில் வரை ஊர்வலமாக சென்றனர். இதில் நெமிலி நகர செயலாளர் செல்வம், நெமிலி மேற்கு ஒன்றிய மாணவரணி செயலாளர் முருகன், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் அன்பரசு, நெமிலி ஒன்றிய கவுன்சிலர் வினோத்குமார், ரெட்டிவலம் விஜயன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் கலந்துகொண்டனர்.