குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு


குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு
x

குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர்

தொழிலாளர் நலத்துறையின் சார்பில் ஆண்டுதோறும் ஜூன் 12-ந் தேதி உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு உலக குழந்தை தொழிலாளர் தினம் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை வருவதால் பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் நேற்று உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது. பெரம்பலூரில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமையிலும், அரியலூரில் கலெக்டர் ரமணசரஸ்வதி தலைமையிலும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள், ஊழியர்கள் பணியாளர்கள் உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழியினை ஏற்று கொண்டனர். மேலும் இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெரம்பலூரில் கையெழுத்து இயக்கத்தை கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தொடங்கி வைத்தார். 14 வயதிற்குட்பட்ட எந்தவொரு குழந்தையையும் எவ்வித பணியிலோ அல்லது தொழிலிலோ ஈடுபடுத்தக்கூடாது. அவ்வாறு மீறி அமர்த்தினால் சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளர் மீது குற்றவியல் வழக்கு தொடர்ந்து ரூ.50 ஆயிரம் அபராதமோ அல்லது 6 மாதங்கள் முதல் 2 ஆண்டு வரை சிறை தண்டனையோ அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story