குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் குறித்து ஆலோசனை
குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் குறித்து ஆலோசனை நடந்தது.
கரூர்
தோகைமலையில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் சமூக பாதுகாப்பு திட்டத்தின் ஒன்றிய அளவிலான ஆலோசனை குழுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு தோகைமலை ஒன்றியக்குழு தலைவர் சுகந்தி சசிகுமார் தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். ஆதரவற்ற குழந்தைகளை கண்டறிந்து, அவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும், பாலியல் தொந்தரவுகள் மற்றும் பாதுகாப்பு இல்லாத குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு பாதுகாப்பு வசதிகளை அமைத்து கொடுக்க வேண்டும், குழந்தைகளை பராமரிக்க முடியாத குடும்பங்களை அறிந்து அவர்களுக்கு தமிழ்நாடு அரசு திட்டங்களை எடுத்துக்கூறி வழி காட்ட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதேபோல் இளந்தளிர் இல்லம் என்ற திட்டம் மூலம் குழந்தை திருமணத்தை முற்றிலும் தடுப்பதற்கும் பல்வேறு கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டது.
Related Tags :
Next Story