3 நாட்களுக்கு பிறகு விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்கிறார்கள்
3 நாட்களுக்கு பிறகு விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்கிறார்கள்.
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதையடுத்து, கடந்த 1-ந் தேதி முதல் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மீன்வளத்துறையினரால் தடை விதிக்கப்பட்டது. இதனால் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் கடந்த 3 நாட்களாக மீன் பிடிக்க செல்லாமல் தங்கள் படகுகளை கரையில் நிறுத்தி வைத்தனர்.
இந்தநிலையில் காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்த காரணத்தினால் தற்போது இயல்புநிலை திரும்பி உள்ளதால் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடிக்க மீன்வளத்துறை அனுமதி அளித்துள்ளது. அதன் அடிப்படையில் 3 நாட்களுக்கு பிறகு இன்று (சனிக்கிழமை) கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்கின்றனர்.