சிம்லாவில் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற பிறகு ராஜஸ்தானில் மீண்டும் பாதயாத்திரையை தொடங்கிய ராகுல் காந்தி


சிம்லாவில் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற பிறகு ராஜஸ்தானில் மீண்டும் பாதயாத்திரையை தொடங்கிய ராகுல் காந்தி
x

சிம்லாவில் நடந்த இமாச்சல பிரதேச முதல்-மந்திரியின் பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.

ஜெய்பூர்,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 'இந்திய ஒற்றுமை யாத்திரை' என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். தென் மாநிலங்களில் பாதயாத்திரையை முடித்த பிறகு, தற்போது காங்கிரஸ் ஆளும் மாநிலமான ராஜஸ்தானில் ராகுல் காந்தி நடைபயணத்தை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் இன்று மதியம் சிம்லாவில் நடந்த இமாச்சல பிரதேச முதல்-மந்திரியின் பதவியேற்பு விழாவில் அவர் கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து உடனடியாக மாலையில் ராஜஸ்தான் திரும்பிய ராகுல் காந்தி, அங்குள்ள பூந்தி நகரில் தனது பாதயாத்திரையை மீண்டும் தொடர்ந்தார்.

1 More update

Next Story