3-ம் கட்ட அகழாய்வு பணியில் மீண்டும் வாய்க்கால் போன்ற அமைப்பு கண்டுபிடிப்பு


3-ம் கட்ட அகழாய்வு பணியில் மீண்டும் வாய்க்கால் போன்ற அமைப்பு கண்டுபிடிப்பு
x

3-ம் கட்ட அகழாய்வு பணியில் மீண்டும் வாய்க்கால் போன்ற அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரம் அருகே மாளிகை மேட்டில் தற்போது 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியை உடையார்பாளையம் கோட்டாட்சியர் பரிமளம் கடந்த 6-ந் தேதி தொடங்கி வைத்தார். இந்த அகழாய்வானது செப்டம்பர் மாத இறுதி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில் நேற்று மீண்டும் வாய்க்கால் போன்ற அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மேற்காக 315 சென்டி மீட்டர் நீளமும், 45 சென்டி மீட்டர் அகலமும் உள்ளது. மீண்டும் தோண்ட தோண்ட இதனுடைய நீளம் தெரியக்கூடும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story