பயிற்சியை நிறைவு செய்த அக்னிவீர் வாயு வீரர்கள் - தாம்பரம் விமானப்படை தளத்தில் அணிவகுப்பு


பயிற்சியை நிறைவு செய்த அக்னிவீர் வாயு வீரர்கள் - தாம்பரம் விமானப்படை தளத்தில் அணிவகுப்பு
x

தாம்பரம் விமானப்படை தளத்தில் பயிற்சியை நிறைவு செய்த அக்னிவீர் வாயு வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது.

செங்கல்பட்டு,

தாம்பரம் விமானப்படை தளத்தில் பயிற்சியை நிறைவு செய்த 1,983 அக்னிவீர் வாயு விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. இதில் 234 வீராங்கனைகளும் அடக்கம். இவர்களுக்கு மொத்தம் 22 வாரங்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஏர் வைஸ் மார்ஷல் அமன் கபூர், இந்திய விமானப்படையில் அக்னிவீர் வாயு வீரர்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சிறப்பாக செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் விமானப்படை வீரர், வீராங்கனைகளின் சாகசங்கள் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.



1 More update

Next Story