விவசாய பணிகள் தீவிரம்


விவசாய பணிகள் தீவிரம்
x

தேவதானம் பகுதியில் விவசாய பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர், தேவதானம், கோவிலூர், சொக்கநாதன்புத்தூர், சாஸ்தா கோவில் பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் நெல் நடவு செய்வதற்காக நாற்றங்காலில் நாற்றினை தயார் நிலையில் வைத்திருந்தனர். கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் மழை இல்லாததால் ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் எடுத்து விவசாயிகள் நாற்று நடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு திடீரென மழை பெய்தது. இந்த மழையினால் வயல்களில் ஓரளவு தண்ணீர் தேங்கியது. இதனை பயன்படுத்தி விவசாயிகள் நெல் நடவுக்காக வயலை டிராக்டர் மூலம் உழுவு செய்யும் பணியை தொடங்கியுள்ளனர். மேலும் நாற்று நடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு தேவதானம் பகுதியில் விவசாய பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.


1 More update

Next Story